திருக்குறள்

1205.

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல்.

திருக்குறள் 1205

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல்.

பொருள்:

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

மு.வரததாசனார் உரை:

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.

சாலமன் பாப்பையா உரை:

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.